கடலூர் மாவட்டம் சொத்திக்குப்பம் கடற்கரை பகுதிக்கு நேற்று காலை சுமார் 4 1/2 அடி நீளமுள்ள கடல் பாம்பு ஒன்று கரைக்கு வந்தது. அந்த பாம்பு கடல் நீரை விட்டு வெளி யேறி, கடற்கரை மணலில் ஊர்ந்த படி சென்றது. இதனை அங்கி ருந்த மீனவர்கள் மற்றும் பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் அந்த கடல் பாம்பு கடலுக்குள் சென்றுவிட்டது.