கடலூர் மாவட்டம் சோனங்குப்பம் கிராமத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் 88 ஆம் ஆண்டு மாசிமக திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.