நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு கடலூரில் சிவாஜிகணேசன் பொதுநலப் பேரவை சார்பில் சிவாஜி கணேசன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கடலூர் மாநகராட்சி துணைமேயர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.