கடலூர் மாவட்டம் செம்மண்டலம், தீபன் நகர் பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைத்து தரவேண்டி அப்பகுதியினர் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தீபன் நகரில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி துவங்கி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. வடிகால் அமைக்கும் பணி விரைவில் முடிவடைய உள்ளதால் அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.