கடலூர் மாவட்டம் செம்மண்டலம் வரதராஜன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இன்று பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.