கடலூர் மாவட்டம் செம்மண்டலம் குண்டுசாலை அருகே உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவிலில் செடல் மகோற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ட்ரம்ஸ் மற்றும் மேளக் கச்சேரியுடன் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் தற்காலிக விளையாட்டுப் பொருட்கள் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.