கடலூர் அடுத்த எஸ். என். சாவடி, ஓம்சக்தி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ புத்து நாகவல்லி அம்மன் ஆலயத்தின் 42-ஆம் ஆண்டு ஆடி உற்சவத்தை முன்னிட்டு நேற்று இரவு 7 மணியளவில் கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இரவு 10 மணியளவில் சுவாமி மின் அலங்காரம் மற்றும் வான வேடிக்கையுடன், ஓம்சக்தி நகர், காவேரி நகர், ஜோதிநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வீதியுலா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.