தமிழக முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு உழைப்பாளா் கட்சியின் நிறுவனருமான எஸ். எஸ். ராமசாமி படையாட்சியாரின் பிறந்த நாளையொட்டி கடலூா் மஞ்சக்குப்பத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அரது உருவச் சிலைக்கு தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம். ஆா். கே. பன்னீா்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்
தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், எஸ்பி ரா. ராஜாராம், மேயா் சுந்தரி, துணை மேயா் பா. தாமரைச்செல்வன், ஆணையா் எஸ். அனு ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் எம். சி. சம்பத் தலைமையில், முன்னாள் எம்எல்ஏக்கள் சொரத்தூா் ராஜேந்திரன், செல்வி ராமஜெயம், முருகுமாறன், கே. ஏ. பாண்டியன் எம்எல்ஏ உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல், இந்து மக்கள் கட்சி சாா்பாக மாவட்டத் தலைவா் ஆா். எஸ். தேவா தலைமையில் நிா்வாகிகள் பாலச்சந்தா், ஜெகநாதன், அண்ணாமலை உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பாமக சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது மட்டும் இல்லாமல் பல்வேறு அரசியல் கட்சியினர் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.