கடலூரில் இருந்து சிதம்பரம் மற்றும் பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லக்கூடிய முக்கியமான சாலையான கடலூர் முதுநகர் அடுத்த இரட்டை ரோடு அருகில் உள்ள சாலையில் சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் காலை மற்றும் மாலை வேலைகளில் இங்கு அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.