கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் வீட்டில் ஒரு பாம்பு உள்ளதாக கடலூரில் பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் செல்லா லாவகமாக அந்த பாம்பை பிடித்தார். அந்த பாம்பு அரிதாக காணக்கூடிய மோதிர வளையன் பாம்பு என தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.