குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்

613பார்த்தது
குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, கால் பந்து, கூடைப்பந்து, இறகுபந்து, பூப்பந்து, ஓடு தளம், கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு ஆடுகளங்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடலூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையால் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க நிரந்தரமாக வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி