கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட புதுப்பாளையம் 20வது வார்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாநகராட்சி சார்பில் இலவச மருத்துவ முகாமை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா துவக்கி வைத்தார். உடன் மாமன்ற உறுப்பினர் சுதா அரங்கநாதன் மற்றும் மருத்துவர் அபிநயா, மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.