நடுவீரப்பட்டு: அரசு பள்ளியில் விழிப்புணர்வு

83பார்த்தது
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS மாணவ மாணவியர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், அறிமுகம் இல்லாத நபர்கள் செல்போன் மூலம் அறிமுகமாகி உங்களிடம் அன்பாக பேசி, குடும்ப விவரங்களை தெரிந்து கொண்டு பின்னர் ஹாய் (Hai) என குறுஞ்செய்தி அனுப்பி நண்பர்களாக அறிமுகமாகும் நபர்கள் அன்பாக பேசுவதுபோல் பேசி உங்களுடைய போட்டோ, வீடியோவை சேகரித்து வைத்துக்கொண்டு தவறாக சித்தரித்து வைத்துக்கொண்டு அச்சுறுத்தி பாலியல் தொந்தரவு தரும் நபர்களிம் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், எனவே மாணவிகள் ஆண்ட்ராய்டு செல் மூலம் ரீல்ஸ் போடுவது, அழகான போட்டோவை டிபியில் வைப்பது சமூகவிரோதிகள் தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது. மாணவ மாணவிகள் ஏமாறாமல் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வில் முன்னேற வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் புகையிலை, மது, கஞ்சா போன்ற போதைப் பொருட்களை வாழ்க்கையிலேயே உபயோகப்படுத்த மாட்டேன், புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வேன், சாதிய பாகுபாடு பார்க்க மாட்டேன், நான் என் பெற்றோருக்கும், படித்த பள்ளிக்கும், ஆசிரியர் பெருமக்களுக்கும், சமூகத்துக்கும் சிறந்தவனாக இருப்பேன் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி