கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் பாலதண்டாயுதபாணி கோயிலில் ஆடி மாதம் கிருத்திகையை முன்னிட்டு இன்று மாலை 7 மணிக்கு முருகர் சுவாமி "பச்சை சாத்தி" அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதனை தொடர்ந்து ஆலயத்தை சுற்றி சுவாமி வீதியுலா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.