கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பேருந்து நிறுத்த நிழற்குடையில் நூற்றுக்கணக்கான பயணிகள் தினமும் அலுவலகம், பள்ளி, கல்லூரி செல்ல காத்திருப்பது வழக்கம். இந்த நிலையில் பேருந்து நிழற்குடையில் உள்ள இரும்பு தூண்கள் துருப்பிடித்து காணப்பட்டது. இதையடுத்து பேருந்து நிழற்குடையில் உள்ள இரும்பு தூண்களுக்கு துரு நீக்கி, வண்ணம் தீட்டும் பணி ஊழியர்கள் மூலம் நடைபெற்றது.