கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் மாடுகள் சாலையில் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இந்த மாடுகள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகனங்களில் செல்பவர்கள் மாடு மீது மோதி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.