கடலூர் அடுத்த கோண்டூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நண்பர்கள் நகர், ஜோதி நகர், உள்ளிட்ட பல குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. மேலும் இந்த பன்றிகள் சில சமயங்களில் பொதுமக்களை கடிப்பதற்காக துரத்தவும் செய்கின்றன. எனவே குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.