தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கலைச்சங்கமம் விழா கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாநகராட்சி துணை மேயர் வழக்கறிஞர் பா. தாமரைச்செல்வன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.