கடலூரில் பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய சாலைகள் ஆங்காங்கே குண்டும், குழியுமாக மற்றும் பெயர்ந்த நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று (10/01/2025) கடலூர் அடுத்த நண்பர்கள் நகர் எதிரே குண்டும், குழியுமாக காணப்பட்ட முக்கிய சாலை ஊழியர்கள் மூலம் சீரமைக்கப்பட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.