கடலூர், மஞ்சக்குப்பம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், புதிய கொடி மரம் நிறுவும் விழாவினை முன்னிட்டு, இன்று புதன்கிழமை காலை அகவல் ஓதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரம் ஏற்றுதல் மற்றும் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.