கடலூர் மாவட்டம் C. N. பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாணவ, மாணவியருடன் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து உரையாடப்பட்டது, புகையிலை, மது, கஞ்சா ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்பதோடு, புத்தக வாசிப்பை வழக்கமாக்குவோம் என உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. நிகழ்வு மாணவர்களில் நல்ல பாதிப்பை ஏற்படுத்தியது.