கடலூர், செம்மண்டலம் சிக்னல் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சாந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று (ஜூலை. 27) ஆடி மாதம் சனிக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி ஆஞ்சநேயர் சுவாமியை வழிபட்டனர்.