கடலூர்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

55பார்த்தது
கடலூர்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் விடுதலை முன்னணிச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சங்கத்தின் செயலாளர் சங்கர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பேரவைத் துணைத் தலைவர் கருணாநிதி, பேரவைத் துணைச் செயலாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் கௌரவத் தலைவரும் கடலூர் மாநகராட்சித் துணை மேயரும் ஆன பா. தாமரைச்செல்வன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இந்தக் கூட்டத்தில் தலைமை நிலையச் செயலாளர் மோகன், பணிமனைத் தலைவர் கந்தவேல், பணிமனைச் செயலாளர் சுப்பிரமணி, கடலூர் பணிமனைச் செயலாளர் ரகுபதி, பொருளாளர் ஜெகதீசன், செயற்குழு உறுப்பினர் ஜெகதீசன், அமைப்புச் செயலாளர் தண்டபாணி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். 

இந்தக் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன: பதினைந்தாவது ஊதியக்குழுப் பேச்சுவார்த்தை சுகமாகப் பேசி முடிப்பது, ஓய்வுபெற்ற தொழிலாளிகளுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறையாக உள்ளதால் தற்காலிகமாக ஓட்டுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வண்டிகளை ஓட்டுகிறார்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் நிரந்தர தொழிலாளர்களை உடனே பணியில் அமர்த்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி