விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுனாமி நினைவு நாள் நிகழ்ச்சி கடலூர் மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில் தலைமையில் கடலூர் சில்வர் பீச்சில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் பங்கேற்று சுனாமியில் உயிர் நீத்தவர்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், கடலூர் நகர செயலாளர்கள் செங்கதிர், ராஜதுரை, நகர பொருளாளர் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் ஆழிப்பேரலையில் உயிர்நீத்த அனைவருக்கும் மலர் அஞ்சலி செலுத்தினர்.