சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கடலூர் மாநகராட்சி சார்பில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையர் அணு ஐஏஎஸ் ஆகியோர் தலைமையில் மரம் நடு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் பிரசன்னா, மாமன்ற உறுப்பினர் நடராஜன், மாநகராட்சி பொறியாளர், மாநகராட்சி நகர அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.