கடலூர் ஜட்ஜ் பங்களா சாலையில் அமைந்துள்ள ஸ்ரீகமலவல்லி சமேத கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று காலை ரதசப்தமியை முன்னிட்டு, வரதராஜ பெருமாள் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் முன் சூரிய பகவானுக்கு அருள் பாலித்தார். இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையுடன், சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.