கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கடலூர் மாநகர மேயர் சுந்தரி ராஜா, அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.