கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S ஜெயக்குமார் IPS கடலூரிலிருந்து ரோந்து பணியாக குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, ஆலப்பாக்கம் வழியாக பூண்டியாங்குப்பம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது சாலை விபத்தில் அடிபட்டு கிடந்த தம்பிப்பேட்டை ராஜேஷ் வயது 32 என்பவரை கண்டவுடன் வாகனத்தை நிறுத்தி அதி விரைவு படை வீரர்கள் மூலம் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து, பின்னர் காயம்பட்டு கிடந்த நபரின் உயிரை காக்கும் பொருட்டு காயம்பட்ட நபரை பத்திரமாக தூக்கி வந்து 108 ஆம்புலன்ஸ் ஏற்றி மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். இதனை ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.