கடலூர் மாநகராட்சியில் குப்பைகளை கையாள சிட்டி கிளீன் என்ற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. இந்நிறுவனம் குப்பைகளை சரியாக அகற்றவில்லை என கூறி ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், இந்த நிறுவனமானது தூய்மை பணியாளர்களை முழுமையாக பணியமர்த்தாததுதெரியவந்துள்ளது. 350 பணியாளர்கள் வேலை செய்ய வேண்டிய இடத்தில் சுமார் 80 பேர் விடுப்பில் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.