கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று(அக்.5) இரவு கனமழை பெய்தது. இந்த நிலையில் கடலூர் அடுத்த உண்ணாமலைசெட்டி சாவடி பெண்ணையார் சாலையில் மழைநீர் வடிய வழியில்லாமல் சாலையிலேயே தேங்கியுள்ளது. மேலும் சாலை ஓரத்தில் உள்ள குப்பைகளும் மழைநீரில் கலந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைவதோடு, அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.