கடலூர் மாவட்டம் செம்மண்டலம் சிக்னல் அருகே ஆஞ்சநேயர் கோவில் வாசலில் உள்ள மின்கம்பத்தில் மின்சார பெட்டி உள்ளது. இந்த மின்சார பெட்டி வளைந்த நிலையில் பூட்டு ஒழுங்காக வேலை செய்யாத நிலையில் பெட்டியின் கதவு திறந்து கிடக்கின்றது. எனவே மின்சார பெட்டியை எந்த ஒரு சேதமும் நிகழும் முன் முறையான பூட்டு அமைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.