கடலூர் மாவட்டம் கோண்டூர் அருகே முத்துசாமி நகர் முகப்பு சாலையில் மளிகை கடை ஒன்று உள்ளது. இதன் அருகில் இருக்கும் தெருமின் விளக்கில் செடி, கொடிகள் அதிகளவில் படர்ந்து மின் கம்பத்தில் உள்ள விளக்கு தெரியாத நிலையில் மிகவும் அபாயகரமான நிலையில் காணப்படுகிறது. எனவே தெருமின் விளக்கில் படர்ந்துள்ள செடி, கொடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.