கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையம் பருவ காலம் முடிந்தும் இன்னும் திறக்கப்படாத நிலையில் உள்ளது. நெல் பல நாட்களாக வெளியில் கொட்டி கிடக்கிறது இருப்பினும் அதிகாரிகள் வராததால் விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எப்பொழுது திறக்கப்படும் அரசின் கொள்முதல் நிலையம் என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.