கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்மண்டலம், நத்தவல்லி பைபாஸ் சாலை, திருப்பாதிரிப்புலியூர், கம்மியம்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மாடுகள் அதிக அளவில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக திரிகின்றது. மேலும் இந்த மாடுகள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.