கடலூர் அருகே உண்ணாமலை செட்டி சாவடி பெண்ணையார் சாலையில் அமைந்துள்ள புத்து நாகவல்லி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு லலிதா திரிசக்தி ஸ்ரீ தேவி பாகவத பாராயணம் விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோயிலில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளை பார்த்து ரசித்தனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.