தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் அடுத்து கடலூர் சில்வர் கடற்கரை சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய பொழுது போக்கு இடமாக உள்ளது. தற்போது மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதாலும் இன்று காந்தி ஜெயந்தி விடுமுறை தினம் என்பதாலும் கடலூர் சில்வர் கடற்கரை ஏராளமான பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் குவிந்தனர். மேலும் சிறுவர்கள் கடல் மணலில் விளையாடி மகிழ்ந்தனர். இதனால் இன்று சில்வர் கடற்கரை களை கட்டியது.