கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் இன்று இரவு கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையினால் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.