கடலூர் கம்மியம்பேட்டை பி. ஆர். எஸ். வெங்கடேசன் நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் இவர் தனது வீட்டுக்கு எதிரில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் அதை பார்த்த போது காணவில்லை. அதற்குள் யாரோ மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்று விட்டனர். இது பற்றி ராதாகிருஷ்ணன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.