கடலூர் மாநகராட்சி 3வது வார்டு எம். ஜே. கே நகரில் சாலை அமைக்கும் பணி துவங்க உள்ளது. இந்த நிலையில் மூன்றாவது வார்டு மாமன்ற உறுப்பினர் அ. பிரகாஷ், எம். ஜே. கே நகரில் சாலை அமைக்கப்பட உள்ள இடத்தை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் இருந்தனர்.