கடலூர் மாவட்டம் பாடலீஸ்வரர் கோவில் அருகே அமைந்துள்ள சீரடி சாய்பாபா ஆலயத்தில் பங்குனி மாதம் வியாழக்கிழமையை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மதியம் 1.30 மணியளவில் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.