தென்னிந்திய ரெட்டி ஜன சங்கம் கடலூர், பார்வை இழப்பு தடுப்பு சங்கம் கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து வழங்கும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நாளை 22 ஆம் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் பாரதி சாலையில் உள்ள சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் கண் புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வானவர்களுக்கு அறுவை சிகிச்சை இலவசம் எனவும் முகாமிற்கு வருகை தரும் அனைவரும் கண்டிப்பாக ஆதார் அட்டை எடுத்து வரவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.