கடலூர் மாவட்டத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சின்னகாட்டுசாகை கிராமத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS பங்கேற்று மராத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கி பாராட்டி பேசுகையில் போதை தனிமனிதனிடம் ஆரம்பித்து குடும்பத்திற்கு செல்கிறது பின் சமூகத்திற்கு செல்கிறது பின் நாட்டை பாதிக்கிறது. வருங்கால இந்தியாவை செம்மைப்படுத்தும் ஆற்றல் இளைஞரிடம் உள்ளது. சில சமூக விரோதிகளால் இளைய சமுதாயம் தவறான போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர் அதை முற்றிலும் தடுத்து இளைஞர்களை நல்வழியில் செல்வதற்காகவே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியாகும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தன்னார்வ இளைஞர்கள் உடன் இருந்தனர்.