கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி , நெய்வேலி, வடலூர், விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் இன்று(அக்.13) மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் இன்று புரட்டாசி மாதம் நிறைவடையாத நிலையில் பொதுமக்கள் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் கடைகளில் மக்கள் கூட்டம் இல்லாமல் காணப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.