கடலூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் 3 வது புத்தகக் கண்காட்சி நாளை மார்ச் 22-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 10 நாள்கள் கடலூா் மாவட்டம் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வீடியோ மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.