கடலூர் அருகே உள்ள கருப்பு கேட் பகுதியில் வீட்டின் கிரில் கேட்டில் நாகப்பாம்பு ஒன்று உள்ளதாக பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் செல்லா பாம்பை லாவகமாக பிடித்து காப்பு காட்டிற்கு விட எடுத்து சென்றார். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாம்பு பிடி வீரரை பாராட்டி வருகின்றனர்.