கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால 2-ம் கட்ட நீச்சல் பயிற்சி இன்று காலை தொடங்கியது. இதில் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சியை துவக்கினர். இந்த நீச்சல் பயிற்சியானது வரும் 28ம் தேதிவரை நடைபெற உள்ளது.