கடலூர்: மனநல தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
உலக மனநல தினத்தை முன்னிட்டு நேற்று(அக்.10) கடலூர் மாவட்ட மனநல திட்டம், அரசு தலைமை மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி கடலூரில் நடைபெற்றது. இதில் கடலூர் அரசு செவிலியர் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.