கடலூர்: நள்ளிரவில் டேங்கர் லாரியில் திடீரென தீ விபத்து

53பார்த்தது
கடலூர்-விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுத்துக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே நள்ளிரவில் டேங்கர் லாரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது காற்று பலமாக வீசவே தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு நிலவியது. அவ்வழியாக சென்றவர்கள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்த சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் லாரி முழுதும் எரிந்து சேதமானது கடலூர் முதுநகர் காவல் துறையினர் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி