கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை தமிழ் குடிலில் வழக்கறிஞர் தமிழகன் எழுதிய "களு கங்கை முதல் கவேரி வரை" இலங்கை மலையகம் குறித்த நூல் அறிமுக நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் அறிவுடை நம்பி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.