கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து மனுக்களை பெற்றாா். மாவட்ட வருவாய் அலுவலா் ம. ராஜசேகரன், தனித் துணை ஆட்சியா் ச. ரமா மற்றும் பல்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 886 மனுக்கள் குவிந்தது. மனுக்கள் மீது ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.